வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 11 செப்டம்பர், 2010

அரசியல் பிரவேசம் குறித்து இப்போது பேசும் சூழ்நிலை இல்லை-ரஜினிகாந்த்

ரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்துப் பேசும் சூழ்நிலை இப்போது இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்

திடீர் சுகயீனமுற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினரை அமைச்சர் பார்வையிட்டார்

யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அமைச்சுக்களின் செயற்பாடுகளை மதிப்பிடுவதற்கு இரகசிய குழு

டந்த சில மாதங்களில் ஒவ்வொரு அமைச்சும் மேற்கொண்ட செயற்பாடுகளை மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்

சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் அபிவிருத்தியிலும் கூடிய கவனமெடுப்போம் - பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்

சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பிரதேச அபிவிருத்தியிலும் நாம் கூடிய கவனமெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

விக்கிரகங்கள் சேதமாக்கப்படுவது குறித்து விசாரணை

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் இந்து ஆலயங்கள் சிலவற்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாதவர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. இது விடயமாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்

ஜனாதிபதி கதிர்காமம் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்குச் சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி கிரி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டதுடன், மகா சங்கதேரர் மற்றும் அலுத்வேவ சோரத்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார்

கிறிஸ்மஸ்தீவில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு

கிறிஸ்மஸ்தீவில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்களில் இருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

பலர் காணாமல் போயுள்ளதாக புகார்

லங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார்

கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் தனக்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை..!

யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடவே கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுவிப்பதற்கு விநயமாக உதவுமாறு கோரி கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: ரணில்

க்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் தெரிவித்துள்ளார்

புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகின்றன: அமெரிக்கா

லங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.

வட., கிழ. அபிவிருத்திக்கு மூன்றாண்டுத் திட்டம் : கெஹெலிய

டக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மூன்றாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.

மன்னார்-கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

ன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் ஐந்து மாதங்களில் நாடுமுழுவதும் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கே.பியின் பிரதிநிதிகளை தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு

மிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனின் (கே.பி.) பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வதற்கு மேற்படி ஒன்றியத்திலுள்ள சில தமிழ்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தமிழில் காதல் படம் என்றால் அது முரளிதான் - சரோஜாதேவி புகழாரம்.

சினிமாவில் காதல் படம், காதல் பட நாயகன் என்றால் உடனே முரளிதான் நினைவுக்கு வருவார். நல்ல நடிகராக, நல்ல குடும்பத் தலைவராக, நல்ல தந்தையாக இருந்தவர் முரளி என்று மறைந்த நடிகர் முரளிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரோஜாதேவி

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியா

பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படையினரும் யாழ். மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினரும் இணைந்து படையினர் பொதுமக்கள் வெற்றிக்கிண்ணத்துக்கான 20:20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது

ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் குட்டிச்சுவராக்கி விட்டார்: லக்ஸ்மன் செனவிரத்ன

மிழ், முஸ்லிம், சிங்களம் என்ற மூவின மக்களாலும் கட்டியெழுப்ப பட்ட ஜக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க குட்டிச்சுவராக்கி விட்டதாக பதுளை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ்ஸா சரணடைந்தார்

றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அப்பல்கலைக்கழத்தின் மற்றொரு மாணவனான இந்திக பஸ்நாயக்க அல்லது பஸ்ஸா பதுளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்

வவுனியாவில் இன்று வெடிப்புச் சம்பவம் : 3 படையினர் காயம்

னியாவிலுள்ள 211ஆம் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இன்று ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

"தில்ஷான் பற்றிய செய்திகள் தவறு"

லங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்ண தில்ஷானைத் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாக். தீவிரவாதிகள் இலங்கையில் பயிற்சி பெறவில்லை : கோட்டாபய

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத குழுவும் இலங்கையில் பயிற்சி பெறவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்

இலங்கையர்களுக்கான அமெரிக்கப் பயிற்சித் திட்டம் இரத்து

3000இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வர்த்த சேவைகளை மூன்றாம் தரப்புக்கு வழங்குதல்- அவுட் சோர்ஸிங், கோல்சென்ரர் துறைகளில் பயிற்சியளிக்கும் திட்டத்தை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் (யூ.எஸ்.எயிட்) இடைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் 25 உறுப்பினர்கள் சுயேச்சை ஆசனத்தில் அமர முடிவு

க்கியத் தேசியக் கட்சியை சேர்ந்த 25 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர்காளாக அமரப் போவதாக அறிவித்துள்ளனர்

இலங்கை நிலைகுறித்து அறியத் தருமாறு இந்தியாவிடம் அமெ. கோரிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது

சொத்துக்காக படுகொலை முயற்சி! யாழ்ப்பாணத்தில் சம்பவம் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தின் தட்டார் தெருவில் வசித்து வந்த 47 வயதுடைய க.விஜயலட்சுமி என்பவரை அவரின் சொந்தச் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் சொத்துக்களை அபகரிக்கின்றமைக்காகப் படுகொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.
ஆயினும் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இப்படுகொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பிய விஜயலட்சுமி

கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி

லங்கை பங்குச் சந்தையின் முக்கிய சுட்டெண்ணான அனைத்துப் பங்குச் சுட்டெண் முதல் தடவையாக 6000 புள்ளிகளை தாண்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

மன்னாரில் ஐ.சி.ஆர்.சி. அலுவலகம் மூடப்படுகிறது

யுத்தம் முடிவடைந்தபின் ஒருவருடங்களுக்கு மேலான காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தனது நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எதிர்வரும் நவம்பர் மாதத்ததுடன் அங்குள்ள தனது அலுவலகத்தை மூடவுள்ளது

மிகச்சிறிய துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றபட்டது

மிகச்சிறிய நவீனரக கையடக்கக் கைத்துப்பாக்கி ஒன்றை அலவத்துகொடை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதுடன் இது தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளனர்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் 365 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!

இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1080 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேறுவதற்காக இன்றைய தினம் (9) அழைத்துச் செல்லப்பட்டனர்

இலங்கையில் பான் விலை அதிகரிப்பு

லங்கையில் பான் எனப்படும் 450 கிராம் எடையுடைய பிரெட்டின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு இராத்தலுக்கு மூன்று ரூபாய்கள் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜெயவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

புதியதோர் தேசத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்:ஜனாதிபதி

க்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம், நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன் என ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா

ன்னை சிறையில் தள்ளுவதற்கும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிரான இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகா இன்று கூறினார்

ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை

சில ஊடகங்கள் தாம் செய்தி வெளியிடும் முறையை தொடர்ந்து மேற்கொண்டால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நிலையை அவை எதிர்நோக்க நேரிடும் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார்

பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண் தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்

மனித உரிமை மீறப்பட்டதாக விஜித ஹேரத் நீதிமன்றில் மனுதாக்கல்

னித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார்

சதாரண பொது மகனுக்கு சிறைத் தண்டனை, தேசத் துரோகிக்கு சுகபோகம்: ரவி கருணாநாயக்க

2500ரூபா கொள்ளையடித்த பொதுமகன் ஒருவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் கடவுச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கே.பி.யை சதந்திரமாக நாட்டில் நடமாட விட்டு இருக்கின்றீர்கள். இது எவ்விதத்தில் நாயம். என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்

கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 பேர் காணாமல் போயிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.செல்வராசா தெரிவித்துள்ளார்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

ளும் கட்சிக்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

யுவதியை வல்லுறவுக்குட்படுத்தி திருமணம் செய்தவர் கைது

24வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.

7 வயது மாணவனை கொன்றவருக்கு மரண தண்டனை

7வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தென் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சறோஜினி குஷலா வீரவர்தன இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்

186 பேர் காணாமல்போய் 20 ஆண்டுகள்

லங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களிலிருந்து சீருடை அணிந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக்கூறப்படும் 186 பேரின் இருபதாம் ஆண்டு நினைவு கூறல் வியாழனன்று கடைபிடிக்கப்பட்டது.

‘Terror Camps In Colombo’ கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு

ந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்

குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்

ஹெலி பயணத்தில் லக்ஷ்மன்

ரசாங்கத்தில் நேற்று புதன்கிழமை இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஊர்வலமொன்றில் கலந்து கொள்வதற்காக ஹெலிகொப்டர் மூலம் மஹியங்கனைக்கு சென்றுள்ளார்

குரான் எரிப்பு வேண்டாம்: ஒபாமா

மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிறித்தவ திருச்சபையின் பாதிரியார் எதிர்வரும் சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்திருப்பதற்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன

சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு

எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்

கொங்கோ வல்லுறவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடமையாற்றத் தவறிவிட்டோம்:ஐ.நா. அதிகாரி

கொங்கோ கிழக்கு ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்ற பாரியளவிலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணியாளர்கள் தவறியுள்ளதாக ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி அதுல் ஹா தெரிவித்தார்

வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் மீது கற்பழிப்பு புகார்!

பெங்களூர்: தனது வீட்டில் வேலை பார்க்கும் 27 வயதுப் பெண்ணை இசையமைப்பாளர், வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் கற்பழிக்க முயன்றதாக புகார் தரப்பட்டுளளது.

நடிகர் ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை-வேலைக்காரப் பெண் பல்டி

மும்பை: நடிகர் ஷைனி அகுஜா என்னைக் கற்பழிக்கவில்லை. அவர் மீது நான் பொய் புகார் கொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார்

தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை

மிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்