வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழீழ விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஏப்ரல், 2013

வடக்கில் 2,000 ஏக்கர் முஸ்லிம்களின் காணியை எல்.ரீ.ரீ.ஈ பறித்தனர்: திவரத்ன



யு த்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் முஸ்லிம்களுக்கு உரிமையான 2,000 ஏக்கர் குடியிருப்புக் காணிகளை பறித்து தங்களது ஆதரவாளர்களுக்கு வழங்கினார்கள் என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

நடேசன், புலித்தேவன் மரணிப்பதை நேரில் பார்த்ததாக இரு சாட்சிகள் தகவல்



ன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் தொடர்பில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டன்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

எல்.ரி.ரி.ஈ. வைத்திருந்த தங்கம் கடத்தப்படுகிறதா?; இந்திய அதிகாரிகள் சந்தேகம்



யுத்தம் முடிவடைந்தபின் இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவது திடீரென அதிகரித்துள்ளமையானது, சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவு தங்கம் கடத்தப்படுகிறது என இந்திய சுங்கப் புலனாய்வு அதிகாரிகளை நம்பச் செய்துள்ளது.

சனி, 28 ஜூலை, 2012

20 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு



போ ர் குற்றங்களை புரிந்ததாக கூறப்படும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக 6 மாதங்களுக்குள் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்படும் எனவும் இதன்மூலம் கைதிகளின் நிச்சயமில்லாத் தன்மைக்கு முடிவு வரும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

எல்.ரி.ரி.ஈ. வீடியோ பார்த்த இருவர் கைது



மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட வீடியோவை உள்ளடக்கிய மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள் இருவரும் மூதூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் குறித்து சட்டமா அதிபர் இன்னமும் ஆலோசனைகளை வழங்கவில்லை



பி ணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சவர்ணம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய சந்தேக நபர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசியப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலியிடம் அறிவித்துள்ளனர்.

வியாழன், 12 ஜனவரி, 2012

புலிகள் சார்பான முத்திரை முதலாவது பாரிய தவறு: லா போஸ்ட்


மிழீழ விடுதலைப் புலிகள் சார்பான முத்திரைகளை அச்சடித்தமையானது பிரத்தியேக முத்திரைகளை அச்சடிக்கும் திட்டத்தில் ஏற்பட்ட முதலாவது பாரிய தவறு என பிரெஞ்சு தபால் துறையான லா போஸ்ட் தெரிவித்துள்ளது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐரோப்பிய நீதிமன்றில் வாதம்

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வேண்டுமென அவ்வமைப்பின் சார்பில் ஆஜரான நெதர்லாந்து சட்டத்தரணியொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

திங்கள், 20 ஜூன், 2011

புலிகளின் சொத்துக்கள், நிதிசேகரிப்பை முடக்குவதற்காக பல சட்டத் திருத்தங்கள்

மிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச் சட்டம், பயங்ரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.

வியாழன், 26 மே, 2011

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது

நெ தர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ். ராமச்சந்திரன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 17 மே, 2011

கனடாவுக்கு அனுப்பப்படவிருந்த புலிகளின் பிரசாரப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன

னடாவுக்கு அனுப்பப்படவிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரப் புத்தங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை இலங்கை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வியாழன், 24 மார்ச், 2011

புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வியாழன், 20 ஜனவரி, 2011

18 புலி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


மிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பி;னர்கள் எனக் கூறப்படும் 18 பேரை தொடர்ந்து பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 20 டிசம்பர், 2010

எல்.ரி.ரி.ஈ.யுடனான தொடர்புகள் குறித்து தாவூத் இப்ராஹிம் குழு உறுப்பினரிடம் விசாரணை

ந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு ஆயுத விநியோகம் செய்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்து இந்திய பாதாள உலகக்குழுத் தலைவரான தாவூத் இப்ராஹிமின் முக்கிய உதவியாளர் ஒருவரிடம் மும்பை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 1 டிசம்பர், 2010

சரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்

றுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது.

திங்கள், 15 நவம்பர், 2010

இந்தியாவும் இலங்கையும் காட்டும் புலிப் 'பூச்சாண்டி'

- கே. சஞ்சயன்
வி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.  கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

வியாழன், 14 அக்டோபர், 2010

புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் நாளை விடுதலை

ரு வருடகாலமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பேர் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் மீண்டும் கைது

ரணடைந்து படையினரால் தடுக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

வியாழன், 9 செப்டம்பர், 2010

சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு

எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்