வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜூலை, 2012

தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் குறித்து சட்டமா அதிபர் இன்னமும் ஆலோசனைகளை வழங்கவில்லை



பி ணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சவர்ணம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய சந்தேக நபர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசியப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலியிடம் அறிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அதன் அறிக்கை 2011 ஏப்ரல் 20ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இரகசியப் பொலிஸார் நேற்று நீதிமன்றில் குறிப்பிட்டனர். எனினும் சந்தேக நபர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் இதுவரை ஆலோசனை வழங்கவில்லை என இரகசியப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 2009 ஏப்ரல் 23ஆம் திகதி ஓமந்தை சோதனைச்சாவடி வழியாக இவ்விரு சந்தேக நபர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின், விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையை விரைவில் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி வழக்கை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’