வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜூலை, 2012

கத்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்



த்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பரினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
சுமார் 117 வருடங்களாக திருகோணமலை மறைமாவட்டத்திற்குள்ளேயே மட்டக்களப்பு, அம்பாறை நிர்வாக மாவட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இந்நிலையில் மட்டக்களப்பு புதிய மறைமாவட்டம் வத்திக்கான் நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணி) வத்திக்கான் திருக்கூடத்தில் பரிசுத்த பாப்பரசர் 16ம் ஆசீர்வாதப்பரினால் பிரகடனம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக மட்டக்களப்பு – அம்பாறை கத்தோலிக்க மக்களாலும் துறவற சபைகளாலும் இலங்கைத் திருச்சபையினூடாக பாப்பரசருக்கு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின் பயனாகவே இப்புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதாக மட்டக்களப்பிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையொருவர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் திருகோணமலை மறைமாவட்டம் தனியாகவும் மட்டக்களப்பு மறைமாவட்டம் தனியாகவும் நிர்வாக ரீதியாக இயங்கவுள்ளதுடன் திருகோணமலையின் ஆயராக அதி வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையினாலும் மட்டக்களப்பு மறைமாநிலத்தின் முதல் ஆயராக அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையும் இறைபணிபுரிவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வறிவிப்பு வெளியானதும் வழக்கப்படி பங்கு ஆலயங்கள் அனைத்திலும் மணி ஒலிக்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’