வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

காதலனுக்கு பிணை வாங்கிகொடுத்த காதலி

10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த காதலனுக்கு அவருடைய காதலி விடுத்த கோரிக்கையை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு



கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

மட்டக்களப்பில் மூன்று கைக்குண்டுகள் மீட்பு



ட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் இன்று காலை மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் வீதியில் முன்னர் மாடறுக்கும் தொழுவம் அமைந்துள்ள இடத்துக்கு அண்மையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப்டம்பர், 2012

மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி



ட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவான நான்கு உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத்தழுவியதுடன் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

மட்டக்களப்பில் வாக்களிப்புப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு விநியோகம்



கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்களும், 38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், 3,47,099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மட்டு. - குருமண்வெளி குளம் அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு



ட்டக்களப்பு மாவட்டத்தின், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி பிரதேசத்திலுள்ள குளம் ஒன்றின் அருகில் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்கள் த. ம. வி. புலிகளால் பறிப்பு



கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச்சேர்ந்த சிலர் நேற்று பறித்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

சனி, 28 ஜூலை, 2012

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் வசம் அரச கட்டிடம்; ஒப்படைக்க மறுப்பு


தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறி முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அரச கட்டிடத்தைத் தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பதாகவும் அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் தேர்தல் ஆணையாளர், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது.

சனி, 7 ஜூலை, 2012

வாழைச்சேனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு _



வா ழைச்சேனை பேத்தாழை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழையில் ஒரு தொகை ஆயுதங்களை வெலிக்கந்தையில் இருந்துவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

கத்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்



த்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பரினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மட்டக்களப்பில் காந்தி, விபுலானந்தர் சிலை உட்பட பலரின் உருவச் சிலைகள் உடைப்பு



ட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் ஞாபகார்த்த சிலை ஆகியன இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சனி, 21 ஜனவரி, 2012

சுயதொழில் பயிற்சிக்காக மட்டக்களப்பிலிருந்து 800 யுவதிகள் இந்தியா பயணம்



ட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 800 இளம் யுவதிகளை சேவா அமைப்பின் சுயதொழில் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் குஜராத் ஆகிய பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு இந்தியா செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்களை இன்று காலை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மட்டக்களப்பில் 24 மணிநேரத்தில் 36.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி


ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடைமழை பெய்துவருகின்றது. நேற்றுக் காலைமுதல் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 36.4மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி ஏ.எம்.சாலிஹீன் தெரிவித்தார்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு


ட்டு. மாவட்டத்திலுள்ள பிரதான நீர்ப்பாசன குளங்கள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதம பொறியியலாளர் என்.கிருஷாந்தன் தெரிவித்தார்.

புதன், 19 அக்டோபர், 2011

மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக வாழ்வதற்கு அனுமதியேன்: ஜனாதிபதி


ட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

புகைப்பிடிப்பதை கண்டித்ததற்காக தற்கொலை செய்த 14 வயது சிறுவன்

ட்டக்களப்பு, வாழைச்சேனையில் 14 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். விநாயகபுரம் 3ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் சிறிதரன் தனுஸ்காந்தன் என்ற பாடசாலையை விட்டு இடை விலகிய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழன், 30 ஜூன், 2011

மட்டக்களப்பில் வங்கிக் கொள்ளை; ஆயுதமுனையில் நகை, பணம் அபகரிப்பு

ட்டக்களப்பு புறநகர்ப்பகுதியான திமிலைத்தீவு பழைய பால்பண்ணை வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்த ஆயதம் தாங்கிய நபர்கள் 37 இலட்சம் ரூபா பணம் உட்பட பெருமளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை.

திங்கள், 16 மே, 2011

மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் கைது

கொ லை சம்பவமொன்று தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் டெய்லி மிரருக்கு தெரிவித்தனர்.

புதன், 6 ஏப்ரல், 2011

வீட்டினுள் இருந்து பிடிக்கப்பட்ட 64 பாம்புக் குட்டிகள்

ட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 64 நல்ல பாம்புக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன.