ம ட்டக்களப்பு புறநகர்ப்பகுதியான திமிலைத்தீவு பழைய பால்பண்ணை வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்த ஆயதம் தாங்கிய நபர்கள் 37 இலட்சம் ரூபா பணம் உட்பட பெருமளவு நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் வங்கியின் இலட்சினை மற்றும் பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட வான் ஒன்றில் வந்த ரி 56 ரக துப்பாக்கிக தாங்கிய முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட குழுவே இக்கொள்ளையை மேற்கொண்டுள்ளது.
வங்கிக்குள் புகுந்த குழுவினர் வங்கின் காவலாளியின் ஆயுதத்தை பறித்து சேதபடுத்தியபின்னர் அவரையும் தாக்கியதாகவும் அதன்பின் வங்கியை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஆயுதக்குழுவினர் அங்கு கடமைபுரிந்த ஐந்து ஊழியர்களை அறையொன்றுக்குள் கொண்டுசென்று அடைத்துவிட்டு கொள்ளை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வங்கியில் இருந்த இரண்டு பாதுகாப்பு பெட்டியில் இருந்த பெருமளவு தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதுடன் இன்னுமொரு பாதுகாப்பு பெட்டியில் இருந்த 35 இலட்சம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளனர். அத்துடன் வாடிக்கையாளர் பகுதியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து இன்று காலை முதல் பெறப்பட்ட பணம் இரண்டு இலட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி கணக்கிடப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ள சந்தர்ப்பத்தில் குறித்த வங்கியின் முகாமையாளர் கடந்த மூன்று தினங்களாக சுகவீன விடுமுறையில் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் தகவல்களில் இருந்து தெரியவருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு பிற்பகல் 2.25 மணியளவிலேயே தகவல் கிடைத்ததாக சம்பவத்தின்போது வங்கிக்கு சென்றிருந்த பொதுமக்களே தமக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டநாட்களுக்கு பின்னர் இடம்பெற்ற பாரிய கொள்ளைச்சம்பவம் இதுவாகும்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் விரைந்துசென்றதுடன் அப்பகுதிக்கு மேலதிக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு அப்பகுதி தேடுதலுக்குள்ளாக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயகுணவர்தன, மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ரவீந்திர கரவிட்கே, மட்டக்களப்பு மாவட்ட 234 படையணி கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் பூரக செனவிரத்தின மற்றும் மாவட்டத்தின் ஏனைய உதவி பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், படை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இராணுவப்புலனாய்வு மற்றும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நகரையண்டிய புறநகர்பகுதியில் ஆயதம் தரித்த நபர்களினால் பகல்வேளையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொள்ளைச் சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’