வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 ஜூன், 2011

யாழ். மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?; த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே மோதல்

யா ழ் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக இம்மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவருக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டது.

இன்று வியாழக்கிழமை காலை யாழ் மாநகரசபையின் இவ்வருடத்திற்கான 6 ஆவது கூட்டத்தொடர் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது உரையாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸுக்கு மேயர்அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான பரஞ்சோதி ஆட்சேபித்தார். அதையடுத்து அவருக்கு எதிராக முடியப்பு றெமிடியஸ் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக தன்னைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்தது எனக் கூறிய அவர் தண்ணீர் போத்தலையும் வீசி எறிந்தார்.
அவரின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேயரிடம் மாநகரசபை உறுப்பினர் பரஞ்சோதி கூறினார். தன்னால் எதுவும் செய்ய முடியாது என மேயர் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் சக உறுப்பினர் முடியப்பு றெமிடிஸுக்கு எதிராக பொலிஸாரிடம் முறையிடப்போவதாக உறுப்பினர் பரஞ்சோதி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’