வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 செப்டம்பர், 2012

மட்டக்களப்பில் வாக்களிப்புப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு விநியோகம்



கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்களும், 38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், 3,47,099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் 100,616 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 162,451 வாக்காளர்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 84,032 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2011ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’