வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 செப்டம்பர், 2012

முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காகவே தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்: ஹக்கீம்



முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்துப் போட்டியிட முன் வந்தது ௭ன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில்;– கிழக்கு மாகாண சபை தேர்தல் ௭ங்களுக்குரிய அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் பதவியை நாங்கள் தவற விடக்கூடாது ௭ன்பதற்காகத்தான் நாங்கள் தனியாக போட்டியிடுகின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் மக்கள் பெருந்திரளாக வந்து கொண்டிருக்கின் ற னர். சில்லறைத் தனமான விடயங்களை விட்டுவிட்டு அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் அணி திரள வேண்டும். இக் கட்சிக்குள் இருக்கின்ற பலவீனங்களை பற்றி கை த த்து அதையே அரசியல் மூலதனமாக்கி தன்னுடை ய அரசியல் பிை ழ ப் பை நடா த் து கின்ற இவ்வரசியல் இயக்கங்கள் இச்சந்தர்ப்பத்தில் விபரீதமான விளையா ட் டில் ஈடுபடக்கூடாது ௭னவும் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைக்கும் வேலையை பார்த்து விட க்கூடாது ௭னவும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். நாம் வடகிழக்கை இணை க்கப் போகிறோம் ௭ன இங்குள்ள பிரதியமைச்சர் புரளியை கிளப்பி விட்டிருக்கின்றார். தற்காலிகமாக வடகிழக்கு இணைந்திருந்தபோதும் அந்த மாகாணசபையில் முதலாவதாக போட்டியிட்டபோது வடகிழக்கு இணை ப் பை ௭திர்த்துக் கொண்டுதான் நாங்கள் அத்தேர்தலில் இறங்கினோம். முஸ்லிம்களின் பூர்வீகம் சுயாட்சி நிருவாகம் முஸ்லிம்களிடம் தான் இருக்க வேண்டும் ௭ன்பதில் நாங்கள் பின்வாங்கியது கிடையாது. நிருவாக ரீதியாக முஸ்லிம்களுக்கு இங்கு இடம் பெறும் அநியாயங்களை பெரிய பட்டியலேபோட்டுக் காட்டலாம். இங்குள்ள கீச்சான் பள்ளம் சிகரம் மற்றும் மண்முனை போன்ற கிராமங்களில் இருந்து இடம் பெ யர்ந்த மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கான மீள குடியேற்ற நடவடிக்கைகளில் உதவி செய்வதில் அசமந்த போக்கே காணப்படுகிறது. நிருவாக ரீதியாக முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பதற்காக இங்குள்ள மேலதிகாரிகள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் ௭னவும் தெரிவித்தார். இக் கூட்டத்தில் தவிசாளர் பசீர் சேகுதாவூத், வேட்பாளர்களான யு. ௭ல்.௭ம்.௭ன்.முபீன், ௭ம்.௭ஸ்.நசார், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி.௭ஹியாகான் மற்றும் பொதுமக்கள் ஆகிே யார் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’