வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 செப்டம்பர், 2012

ராஜபக்ஷவுக்கு மன்மோகனே அழைப்பு விடுத்தார், நானல்ல: சுஷ்மா ஸ்வராஜ்



ந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இம்மாதம் நடைபெறவுள்ள பௌத்த கலாசார விழாவொன்றில் பங்குபற்ற வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுமே அழைப்பு விடுத்ததாகவும் எதிர்க்கட்சி இந்த அழைப்பை விடுக்கவில்லை எனவும் இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜின் தேர்தல் தொகுதியான விதீஷாவில் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இவ்விழாவில் பங்குபற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறித்து பாரதிய ஜனதா கட்சியை அதிமுக தலைவியும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடுகளின் தலைவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரினால் அழைப்பு விடுக்க முடியாது எனக் கூறிய சுஷ்மா ஸ்வராஜ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்திற்கான நிகழ்ச்சிநிரல் இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சினாலேயே தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’