யுத்தம் முடிவடைந்தபின் இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவது திடீரென அதிகரித்துள்ளமையானது, சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவு தங்கம் கடத்தப்படுகிறது என இந்திய சுங்கப் புலனாய்வு அதிகாரிகளை நம்பச் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த தங்கத்தை யாரே கண்டுபிடித்திருந்து, அது மெதுவாக கடத்திவரப்படுவது சாததியமானது என இந்திய சுங்கத்துறை வட்டாரமொன்று தெரிவித்தாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் சென்னை விமான நிலையத்தில் 29 தடவை தங்கம் கடத்தி வரப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் 22 சம்பவங்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த பயணிகள் தொடர்பானவையாகும். "டுபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவது முன்னர் அதிகரித்திருந்தது. ஆனால் இந்த போக்கில் சடுதியான மாற்றத்தைக் காண்கிறோம் தற்போது 75 சதவீதமான தங்கக் கடத்தல்காரர்கள் கொழும்பிலிருந்து வருகின்றனர். அது பாரிய வர்த்தக மையமோ தங்கம் பெருமளவில் கிடைக்கும் இடமோஅல்ல" என சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின்போது எல்.ரி.ரி.ஈ.யினர் வைத்திருந்த சுமார் 6000 கிலோகிராம் தங்கத்தை பாதுகாப்புப் படையினர் படையினர் கைப்பற்றியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக டெக்கான்குரோனிக்கள் குறிப்பிட்டுள்ளது. பெருமளவான தங்கம் தனி நபர்களின் கைகளுக்கு சென்று, அவற்றை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவதாக இருக்கலாம் என இந்திய சுங்கத் திணைக்கள வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் பெண்களின் சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட தங்க நகைகளும் இந்தியாவுக்கு கடத்தப்படக்கூடும் என நம்பப்படுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 24 கரட் தங்க பிஸ்கட்டுகள் உருக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பெண்ணொருவர் கொண்டுவந்த குடையின் மத்திய தண்டுப்பகுதி தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததை நாம் கண்டுபிடித்தோம். அதில் கறுப்பு நிற வர்ணம் பூசப்பட்டிருந்தது. அதேபோல் இலங்கை பயணியொருவர்கொண்டுவந்த பையொன்றின் பிடியானது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது' என இந்திய சுங்கத்துறை வட்டாரமொன்று தெரிவித்துள்ளது -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’