ஒரு வருடகாலமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பேர் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்குழுவுடன், புலிகளின் 11000 முன்னாள் போராளிகளில் விடுதலையானோரின் எண்ணிக்கை 4500 ஆக அதிகரிக்கவுள்ளது. 5000 பேர் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர்.
எஞ்சியுள்ளவர்களில் புலிகளின் தீவிரமான போராளிகள், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
"யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட புலிகளின் போராளிகள் ஏ, பி, சி முதல் ஜி வரை தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
'ஏ மற்றும் பி பிரிவுகளில் சேர்க்கப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்படுகின்றனர். ஏனையவர்கள் எம்மோடு இருக்கின்றனர். சிறிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் 'ஜி' பிரிவில் உள்ளனர். அவர்களும் இப்போது விடுவிக்கப்படுகின்றனர்' என புனர்வாழ்வு அதிகார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’