வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஜூலை, 2012

20 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு



போ ர் குற்றங்களை புரிந்ததாக கூறப்படும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக 6 மாதங்களுக்குள் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்படும் எனவும் இதன்மூலம் கைதிகளின் நிச்சயமில்லாத் தன்மைக்கு முடிவு வரும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
கைதிகள் விவகாரத்தை ஆராய்வதற்காக சுஹத கம்லத் தலைமையில் நால்வர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது. மேற்படி கைதிகளில் 20 பேர் பொதுமக்கள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியமை, அரசியல் தலைவர்களை படுகொலை செய்தமை, தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சியளித்தமை மற்றும் தாக்குதல்களில் ஈடுபடுத்தியமை உட்பட போர் குற்றங்களை புரிந்ததை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக சுஹத கம்லத் தெரிவித்தார். "இக்கைதிகளை நாம் மூன்று வகையாக பிரித்துள்ளோம். கடும்போக்கு எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களைத் தவிர, சிறு குற்றங்களை புரிந்த 150 பேர் அடுத்த வாரம் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவர்" என அவர் கூறினார். "ஏனையோர் எல்.ரி.ரி.ஈ.யின் அச்சுறுத்தல்கள் காரணமாக வேறு வழியில்லாததால் எல்.ரி.ரி.ஈ. இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். தாம் போராளிகளாக சேர்க்கப்படுவதற்கு சம்மதித்திருக்காவிட்டால் தமது குடும்பத்தினர் அனைவரும் எல்.ரி.ரி.ஈ.யினரால் கொல்லப்பட்டிருப்பர் என விசாரணை அதிகாரிகளிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை தயைவுடன் நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்"என அவர் தெரிவித்தார். எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் சிலர், எல்.ரி.ரி.ஈ.யின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புகொண்டிருப்பதாலும் அரசாங்கம் அளித்த புனர்வாழ்வுக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மறுத்ததாலும் விசாரணைகள் இலகுவாக இருக்கவில்லை எனவும் சுஹத கம்லத் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’