தி ருகோணமலை சம்பூரில் அணுமின் நிலையமொன்றை அமைப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை இலங்கை பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
சீனாவின் செல்வாக்கிற்குள் இலங்கையை வைத்திருப்பதற்காக இத்திட்டத்தை பாகிஸ்தான் வடிவமைத்துள்ளதாக இந்தியா டுடே இணையத்தளத்தில் ஜூலை 24 ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், "இத்தீவில் எங்குமே அணுமின் நிலையமொன்றை அமைப்பதற்கு நாம் தீர்மானிக்கவில்லை. அவ்வாறான திட்டத்திற்காக எந்த வெளிநாட்டுடனும் நாம் கலந்துரையாடவில்லை. இந்தியா டுடே யில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது" என்றார். ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது. குறிப்பாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். "கொழும்பு, கற்பிட்டி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் மின்வநியோக அபிவிருத்திக்கான எதிர்கால திட்டங்கள் உள்ளன. இதற்கு நாம் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’