தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர். குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’