வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 மார்ச், 2011

லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு)

லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல.
எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’