வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 மார்ச், 2011

விஜயகாந்த்துக்கு தெரிந்த்து வைகோவுக்கு தெரியவில்லையே!- சுப.வீரபாண்டியன்

ன்ன செய்தால் அதிமுக மேலிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளை அள்ளித் தரும் என்ற உத்தி நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது.. ஆனால் பழுத்த அரசியல்வாதியான வைகோவுக்கு தெரியவில்லையே, என்றார் சுப வீரபாண்டியன்.

திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நடந்த தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
திமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்த அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேமுதிக அதிர்ச்சி, சிபிஐ அதிர்சசி, சிபிஎம் அதிர்ச்சி என்று செய்திகள் வெளியாகின.
சரியாக சொல்லவேண்டும் என்றால் திமுக கூட்டணி, மகிழ்ச்சி கூட்டணி. அந்த கூட்டணி அதிர்ச்சி கூட்டணி.
உடனே நான் நம்பினேன், 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணிலே காலூன்றி இருக்கிற பொதுவுடைமை கட்சி தலைமை ஏற்று மூன்றாவது அணியை அமைக்கும் என்று. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், 8 ஆண்டுகள் கூட ஆகாமல் இருக்கிற ஒரு கட்சியிடம் போய், நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று கோயம்பேட்டுக்கு நடையாய் நடந்தார்கள்.
கோயம்பேட்டில் என்ன செய்தார்கள் என்றால், அந்த அம்மாவுடைய உருவபொம்மையில் ஒரு பச்சை சேலையை உடுத்தி, அதற்கு மேல் நான் சொல்லுவது நாகரீகமாக இருக்காது. அவ்வளவு அநாகரிகமும் அளங்கோலமும் நடந்து முடிந்த பின்னர், அந்த அம்மா அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தாலும் கோயம்பேட்டுக்காரருக்கு சரியாக புரிகிறது. என்ன செய்தால் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என்று தெரிகிறது. பாவம் நெடுக்காலமாக அரசியலிலே இருக்கும் பழுத்த அரசியல்வாதி அண்ணன் வைகோவுக்கு இது தெரியவில்லை. எனவே திமுக கூட்டணி வெற்றி கூட்டணி.

திமுக தேர்தல் அறிக்கை...

திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார். எதிர் அணியினருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் தூளாக ஆக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
இது ஒரு புதிய போக்கு. பொதுவாக தேர்தல் நேரம் என்றால், கூட்டணியிலே எந்தெந்த கட்சியினர் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த தொகுதி. எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்பதை அறிந்துகொள்பதிலேதான் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போதுதெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை எப்போது வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மக்களிடையே பெரும் ஆர்வம் இருக்கிறது.
பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்த தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. அரசு வெளியிட்டுள்ள ஆணை என்று மக்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது", என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’