வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் தொடர்பில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டன்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன், தி இன்டிபென்டென்ட் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் மேற்படி இரண்டு சாட்சிகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில் ஒரு சாட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களின் மெய்க்காவலராகப் பணியாற்றியவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் அவர், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர் என பிரான்செஸ் ஹரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, இலங்கை இராணுவத்தினரால் போர்க்கள முன் அரங்குக்கு அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். பின்னர் இலங்கை இராணுவத்துக்கு தகவல் கொடுக்கக் கூடியவராக மாற்றப்பட்டதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன், தமது குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். போர் முன்னரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு இலங்கை இராணுவம் கொடுத்த பணி என்பது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருகின்ற புலித் தலைவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது என்பதாகும் என 'தி இன்டிபென்டன்ட்' சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களது நூற்றுக்கணக்கான வீரர்களுடன் சரணடைந்த காட்சியைப் பார்த்த போது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே அது தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார் அந்த மெய்ப்பாதுகாவலர். இலங்கை படையினர் வீழ்ந்து கிடந்த சடலங்களை தமது கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவற்றில் நடேசன் மற்றும் புலித்தேவனின் சடலங்களும் இருந்தன என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார். 'தி இன்டிபென்டன்ட்' வெளியிட்டுள்ள மற்றுமொரு சாட்சி பாடசாலை ஆசிரியராவார். போரின் இறுதிக் காலத்தில் தாம் போராளிகளால் கட்டாயமாக பணிக்குச் சேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ள அவரும் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். போரின் இறுதியில் சரணடைந்த தாம் உள்ளிட்ட சிலர் ஒரு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது புலிகளின் தலைவர்கள் பலரும் வெள்ளைக் கொடியேந்தியவாறு இலங்கை இராணுவத்தை நோக்கி வந்தனர் என்று அவர் சாட்சியமளித்துள்ளார். அவர்களில் நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் என பலரும் இருந்ததாகவும் பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதில்லை என்பதால் அது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அந்த ஆசிரியர் குறிப்பிட்டதாக 'தி இன்டிபென்டன்ட்' சுட்டிக்காட்டியுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’