இதன்போது மக்கள் விடுத்த கோரிக்கைகளான அரியாலை கிழக்கு பிரதான வீதி புனரமைப்பு, உவர்நீர் தடுப்பணை அமைத்தல், வீட்டுத்திட்டம், மின்சாரம், வாய்க்கால்களின் புனரமைப்பு போக்குவரத்து, மற்றும் பாடசாலைகளின் பௌதீக வளங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்.
இதில் பாதை புனரமைப்பு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அதேவேளை, நாவலடியிலிருந்து பூம்புகார் வரையிலான பகுதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்சிப் திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் புனரமைக்கப்படுமிடத்து 650 ஏக்கர்களில் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடியதாகயிருக்குமென்ற வகையில் அதுதொடர்பில் துறைசார்ந்தோர்களிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்;டார்.
அத்துடன் ஏ9 வீதியிலிருந்து அரியாலை கிழக்கில் 7 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியூடாக இலங்கை போக்குவரத்துச் சபையினது பேரூந்து சேவையின் முக்கியத்துவம் தொடர்பாகவும், அரியாலை கிழக்கு மற்றும் பூம்புகார் பகுதி மக்களுக்கான காணிகளுக்கு உறுதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சத்தியக்கடிதாசிகளை பெற்றுக் கொள்ளுதல் அவசியமானது என்பதுடன், தற்போது காணிகளில் குடியிருப்போருக்கு நியாயம் கிடைக்கும் வகையில், தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கும் மக்களுக்கும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரியாலை கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்றை பிரதேச சபையூடாக அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்திய அதேவேளை, பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையினது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், அவை தொடர்பிலான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறும் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், அப்பகுதி இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அங்கு தும்புத் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், ஆணி தொழிற்சாலையொன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியதுடன், அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலான திட்ட அறிக்கையினை நல்லூர் பிரதேச செயலரை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது குறிப்பாக அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக மக்கள் அமைச்சர் அவர்களிடம் சுட்டிக்காட்டிய போது அதனை தடுக்கும் வகையில் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவது இன்றிலிருந்து தடை செய்யப்படுவதாக உறுதிபடத் தெரிவித்த அதேவேளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்லாது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கும் வகையில் நாவலடி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்து சட்டவிராத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அப்பகுதி கிராமசேவையாளர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், அச் சம்பவம் குறித்து தாம் மனம் வருந்துவதாகவும், குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
இதனிடையே பூம்புகார் கடற்கரைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தேவைகள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். அரியாலை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 50 பிளாஸ்ரிக் கதிரைகளையும், 20 அடி தகரக் கொட்டகையையும், அமைச்சர் அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன், பிரதேச சபையின் செயலாளர், நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அரியாலை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கணேஸ், ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் ரவிந்தீரதாசன், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’