தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான முத்திரைகளை அச்சடித்தமையானது பிரத்தியேக முத்திரைகளை அச்சடிக்கும் திட்டத்தில் ஏற்பட்ட முதலாவது பாரிய தவறு என பிரெஞ்சு தபால் துறையான லா போஸ்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எழுத்துமூலமாக லா போஸ்ட் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிடம் லா போஸ்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் பிராங்கோயிஸ் சால்வெட் மற்றும் தந்திரோபாய , சர்வதேச பணிப்பாளர் லூயிஸ் விரிகில் ஆகியோர் நேரடியாகவும் மன்னிப்பு கோரியுள்ளதாக லா போஸ்ட் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’