
இதனால் வடக்கில் மீள்குடியமரும் முஸ்லிம்களுக்கு அரசாங்கம் வேறு இடங்களில் காணி வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பறித்ததாகக் கூறப்படும் காணிகளை சிலர் 10 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இவர்களை வெளியேற்றுவதில் நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன என மீள்குடியேற்றத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் எஸ்.பி.திவரத்ன கூறினார். யுத்தம் முடிந்த பின் வடக்கில் 23,000 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற விரும்பியுள்ளனர். இதில் 15,000 குடும்பங்கள் குறிப்பாக மன்னர் மாவட்டத்தில் குடியேற்றப்பட்டு விட்டனர். இன்னும் 8,000 குடும்பங்கள் உள்ளன. 'காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் எம்மால் திருப்பி எடுக்க முடியாது. எனவே நாம் இவர்களுக்கு வேறு காணிகளை வடக்கில் வழங்க வேண்டும்' எனவும் அவர் கூறினார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்களும் பழைய இடங்களுக்கு திரும்ப விரும்பினர். 'நாம் இவர்களை மன்னாரிலும் வவுனியாவிலும் தெற்கிலும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு 2,500 குடும்பங்கள் எம்முடன் பதிவு செய்துள்ளனர். யுத்தம் முடிந்ததும் நாம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தோம். ஆனால் இப்போது நாம் இடம்பெயர்ந்த முஸ்லிம், சிங்கள குடும்பங்களில் முக்கிய கவனம் செலுத்துகின்றோம்' என அவர் கூறினார். இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படும் வீடுகளில் குறிப்பிட்ட சதவீதத்தை சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’