வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 ஏப்ரல், 2013

ஏனையவர்களுடைய மதத்தில் குறைகாண்பவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்லர்: பிரதமர்



ருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.
கம்பளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் ஒரு பௌத்தன். அதற்காக நான் பௌத்த மதம் மாத்திரம் சரியானது என்று கூறமாட்டேன். ஏனைய மத்தினரை விமர்சிக்கும் ஒருவன் உண்மையான பௌத்தனான இருக்கமாட்டான். கௌதம புத்தரின் வழிகாட்டலில் படி நடப்பவர்கள் ஏனையவர்களின் மத, கலாசாரங்களை மதித்து நடப்பர் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’