அ மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக யாழ்ப்பாணம் குருநகரில் அமையப் பெற்றுள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொதுவசதிகள் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவங்ஸ அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் விமல் வீரவங்ஸ இன்றையதினம் (02) குறித்த பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
குருநகரில் அமையப் பெற்றுள்ள 5 மாடிகளைக் கொண்டதான கட்டிடங்களைக் கொண்ட இவ் வீடமைப்புத் திட்டத்தில் 160 குடியிருப்புக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்தகால யுத்தத்தின் போது மேற்படி கட்டிடத் தொகுதி பாரிய சேதத்திற்கு உள்ளாகியிருந்தது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் பல்வேறு வசதியீனங்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் அதனை புனரமைத்துத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மகிந்த சிந்தனைக்கமைவாக மக்களுக்கான நிழல் (ஜனசெவன) எனும் திட்டத்தின் பிரகாரம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் குறித்த தொடர்மாடி புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.
1985ம் ஆண்டு அமைக்கப்பட்ட மேற்படி மாடிக் கட்டிடத் தொகுதியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அப்போது 160 குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பெருமுயற்சியின் பயனாக அமைச்சர் விமல் வீரவங்ஸ அவர்களினால் அவரது அமைச்சினூடாக புனர் நிர்மாணப் பணிகளுக்காக 77 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதனூடாக சேதமடைந்த கட்டிடங்களுடன், மலசல கூடங்கள் கழிவு நீர் வாய்க்கால்கள், நீர்த்தாங்கிகள், புனரமைக்கப்படவுள்ள அதேவேளை குடிநீர், மின்சாரம், வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன் புனரமைப்பு பணிகள் 9 மாத காலத்திற்குள் பூரணப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொதுவசதிகள் பொறியியல்துறை அமைச்சின் செயலர் விமலசிறி பெரேரா, யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’