வட இந்தியர்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் விதத்தில் அமைந்ததாக கூறப்படுகின்ற இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தின் கூற்றை கண்டித்துள்ள மத்திய இராஜாங்க அமைச்சர் வி.நாராயணசாமி, அவர் தனது எல்லையை மீறிவிட்டார் எனத் தெரிவித்தார்.
'அவர் தனது எல்லையை மீறியுள்ளார். அவர் தனது இராஜதந்திர வேலையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்' என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
சிங்களவர்களின் பூர்வீகம் இந்தியாவின் வட மாநிலங்கள் ஆகும் என காரியவசம் கூறியதாக வெளியான செய்தி குறித்து தகவல் தெரிவிக்கையிலேயே மத்திய இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதனை இந்திய தமிழர்களுக்கு எதிராக வட இந்திய மக்களை தூண்டும் முயற்சி என மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ கண்டித்திருந்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டிய குற்றச்சாட்டில் இலங்கை தூதுவரை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வைகோ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார்.
கூடங்குளம் அணுசக்தி தொழிற்சாலை பற்றி கேட்டபோது, முதலாவது தொகுதி விரைவில் உற்பத்தியை தொடங்கும் என நாராயணசாமி கூறினார்.
இந்த அணு தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவதாக வீண் வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் கூறினார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’