தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வேண்டுமென அவ்வமைப்பின் சார்பில் ஆஜரான நெதர்லாந்து சட்டத்தரணியொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
எல்.ரி.ரி.யை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இணைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை ரத்துச் செய்ய வேண்டுமென சட்டத்தரணி விக்டர் கோப் கோரினார். "எல்.ரி.ரி.ஈ. அமைப்பு மேற்படி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு இனியும் இல்லை. தனது அரசியல் இலக்கை அடைவதற்கு இராணுவ தந்திரோபாயத்தை பயன்படுத்துவதில்லை என அவ்வமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது "என அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தடை சட்டரீதியாக தவறானது எனவும் எல்.ரி.ரி.ஈ.யை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை நாடுவதற்கு ஏமாற்றமளிக்கிறது என்பதால் அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும் கோப் வாதாடினார். 'தமிழ் குழுக்கள் சுயநிர்ணய உரிமைக்காக நியாயபூர்வமாக போராடுகின்றனர். எமது பிரதான வாதங்களில் ஒன்று என்னவென்றால், சுயநிர்ணய உரிமை என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். இது இரு தரப்புகள் ஒன்றுடனொன்று போரிடும் ஆயுத மோதலாகும். வெளிப்படையாக, தவறான விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் எல்.ரி.ரி.ஐ. சண்டையிடும் இரு தரப்புகளில் ஒன்று என்று அல்லாமல், ஒரு பயங்கரவாத அமைப்பென அழைப்பது, எமது எண்ணத்தின்படி, சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகும்' எனவும் விக்டோரியா கோப் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’