வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன்பேரும் ஆகிய 3 ஜனாதிபதியிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால், இவர்களது கருணை மனுக்களை ஜனாதிரதி பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’