வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இலங்கை முழுமையான விசாரணை நடத்தவேண்டும், இல்லையேல் சர்வதேச நடவடிக்கை : அமெரிக்கா எச்சரிக்கை

மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச தரத்திற்கிணங்க முழுமையான, சுயாதீனமான, நம்பகமான ஏற்றுக்கொள்ளத்தக்க விசாரணையை இலங்கை நடத்தவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இல்லாவிட்டால் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. "இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலகள் தொடர்பாக முழுமையான, நம்பகமான, சுயாதீனமான ஏற்றுக்கொள்ளத்தக்க விசாரணைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். இலங்கையர்கள் இவ்விசாரணையை சர்வதேச தரத்திற்கமைய அவர்களாகவே செய்வதைக் காண நாம் விரும்புகிறோம். எனவே இலங்கை விமர்சர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், உங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சர்வதேச தரத்திலான விசாரணையை ஆரம்பியுங்கள்" என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நியுலண்ட் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 'இதை விரைவாக செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இலங்கையர்கள் தாமாகவே இதை செய்வார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால், அவர்கள் அதை செய்யாவிட்டால், இலங்கையர்கள் விரும்பாத வகையிலான சர்வதேச நடவடிக்கான அழுத்தம் சர்வதேச சமூகத்தின் மத்தியிலிருந்து அதிகரிக்கப்போகிறது' எனவும் விக்டோரியா கூறினார். இதேவேளை, போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அமெரிக்கா, மற்றும் சர்வதேச சமூகம் நடுநிலையை கடைபிடிக்க வேண்டும் என ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு அளித்த செவ்வியொன்றில் இலங்கை பாதுகாப்புச் செயலாலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’