வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

பொறுப்புக்கூறும் நடவடிக்கையை அமெரிக்கா கவனத்திற்கொள்ளாமைக்கு இலங்கை கவலை



டந்த மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்க
 கவனத்திற்கொள்ளவில்லையென்பதையிட்டு அரசாங்கம் இன்று தனது கவலையை வெளியிட்டுள்ளது. 'எங்களால் முன்னெடுக்கப்பட்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்கா கவனத்திற்கொள்ளவில்லை. இது துரதிஷ்டவசமானது' என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் நிரூபித்துளோம். ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம்' என அவர் கூறினார். அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்காவுக்கு இலங்கை நேரடியாக அறிவிக்கவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 'இந்த குற்றச்சாட்டுகளுக்கு நாம் பலதடவை பதில் கூறிவிட்டோம்' என அவர் கூறினார். அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையை அரசாங்கம் சிறுவிடயமாக கருதவில்லையெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’