முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் சிறையில் சந்தித்தபோது, பொன்சேகாவை தடுத்துவைத்துள்ளமைக்கு எதிரான சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் செய்யப்பட்ட மேன்முறையீடு குறித்து
கலந்துரையாடியதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
"சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் செய்யப்பட்ட மேன்முறையீடு குறித்து நாம் கலந்துரையாடினோம். அந்த ஒன்றியத்தின் அங்கத்தவர்; நீதிமன்ற விசாரணையை பார்வையிட வந்தபின் சமர்ப்பித்த அறிக்கை குறித்தும் நாம் கலந்துரையாடினோம்" என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை திடீரென சந்தித்தமைக்கு காரணம் என்ன? ஐ.தே.கவிற்குள் நிலவும் குழப்ப நிலைக்கும் இவ்விஜயத்திற்கும் சம்பந்தமுள்ளதாக என வினப்பட்டபோது. "அரசியல் குறித்து நாம் கலந்துரையாடவில்லை. எமது தலைவர் வழக்கமாக மாதம் இருதடவை பொன்சேகாவை சந்திப்பார். அந்த வழக்கத்தின்படி நாம் அவரை சந்தித்தோம். அரசியல் தொடர்பான விடயங்கள் எதுவும் நாம் பேசவில்லை" என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’