தன்னை சிறையில் தள்ளுவதற்கும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிரான இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகா இன்று கூறினார்
.நாட்டை ஊழலிலிருந்து விடுவிப்பதற்காக சிறைக்குச் செல்லவும் தான் அஞ்சப்போவதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.
சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக்கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெறுகின்றது.
"இந்த இராணுவ நீதிமன்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த இராணுவ நீதிமன்றத்திலிருந்து எனக்கு நீதி கிடைக்காது என்பதும் சாட்சியங்கள் எப்படியிருப்பினும் நான் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையில் தள்ளப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்" என சரத் பொன்சேகா கூறினார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’