வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை

சில ஊடகங்கள் தாம் செய்தி வெளியிடும் முறையை தொடர்ந்து மேற்கொண்டால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நிலையை அவை எதிர்நோக்க நேரிடும் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்
.ஊடகவியலாளர் இறுதியில் தாம் தூக்கில் தொங்கும் நிலைக்கு தள்ளப்படும் விதமாக செய்திகளை எழுதக்கூடாது எனவும் அவர் கூறினார்.
ஒரு பத்திரிகை தன்னை பற்றிய செய்தி இல்லாவிட்டால் விற்பனையாகாது எனக் கூறிய பிரதியமைச்சர், ஊடகங்கள் தேவையானால் தன்னை திட்டலாம் எனவும் ஆனால், உண்மையை மட்டுமே செய்திகளில் வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.
'என்னைப் பற்றி எழுதுகின்ற, திட்டுகின்ற சிலரை தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியும். அவர்களின் பின்னணி சிறந்ததல்ல' என மேர்வின் சில்வா கூறினார்.
சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவத்தையடுத்து பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’