மும்பை: நடிகர் ஷைனி அகுஜா என்னைக் கற்பழிக்கவில்லை. அவர் மீது நான் பொய் புகார் கொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார்
வேலைக்காரப் பெண் சில மாதங்களுக்கு முன்பு இந்தித் திரையுலகைக் கலக்கிய விவகாரம் இது. நடிகர் ஷைனி அகுஜா வீட்டில் வேலை பார்த்து வந்த பெண், தன்னை ஷைனி கட்டாயப்படுத்தி கெடுத்து விட்டார் என போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஷைனி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பல்டி அடித்துள்ளார் அந்த வேலைக்காரப் பெண். தன்னை ஷைனி வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்ட பெண் பேச்சைக் கேட்டுத்தான் ஷைனி மீது நான் பொய்யான புகாரைக் கூறினேன். ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் விரைவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர்.
செப்டம்பர் 3ம் தேதி கோர்ட்டில் இந்த வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனவும் தெரிகிறது.
செப்டம்பர் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’