இலங்கை பங்குச் சந்தையின் முக்கிய சுட்டெண்ணான அனைத்துப் பங்குச் சுட்டெண் முதல் தடவையாக 6000 புள்ளிகளை தாண்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஒரு மந்தமான நிலைமை காணப்படுகின்ற நிலையிலும் இலங்கை பங்குச் சந்தையில் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கையில் அனைத்துப் பங்குச் சுட்டெண் மற்றும் மிலங்கா சுட்டெண் ஆகிய இரு வகையிலான பங்குச் சுட்டெண்கள் புழக்கத்தில் உள்ளன.
அதில் மிலங்கா சுட்டெண் ஏற்கனவே 6000 புள்ளிகளை தாண்டிவிட்டது. தற்போது அனைத்துப் பங்குச் சுட்டெண்ணும் 6000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இது இலங்கை பங்குச் சந்தையினது அதீத வளர்ச்சியைக் காட்டுவதாக கூறுகிறார் ஏசியா செக்கியூரிட்டிஷ் என்னும் முகவர் நிறுவனத்தின் பங்கு முதலீட்டு ஆலோசகரான யோகினி யோகராஜா.
போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கையில் பங்குச் சந்தையில் துரிதமான வளர்ச்சி காணப்படுவதாகக் கூறும் அவர், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வங்கித்துறை ஆகியவை உட்பட பல துறைகளில் கணிசமான லாபத்தைப் பெறத் தொடங்கியிருப்பதும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு காரணம் என்று விபரிக்கிறார்.
ஏனைய பல வெளிநாடுகளில் கடன் நெருக்கடி காரணமாக பங்குச் சந்தைகளிலும் ஒரு மந்தமான நிலைமை காணப்படுகின்ற போதிலும், இலங்கை பங்குச் சந்தை பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டிலேயே அதிகம் தங்கியிருப்பதால், அதில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும் யோகினி கூறுகிறார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’