வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

வடமராட்சி கிழக்குப் பகுதியில் 365 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!

இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1080 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேறுவதற்காக இன்றைய தினம் (9) அழைத்துச் செல்லப்பட்டனர்
.இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் வன்னி மக்கள் துயர்துடைப்பு குழுவின் செயலாளர் சதீஸ் ஆகியோர் 551வது படைகளின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேராவுடன் கலந்துரையாடியதுடன் மீள்குடியேற்றப் பணிகளையும் பார்வையிட்டனர்.
மீள்குடியேற்றத்திற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அங்குள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டு மூன்று தினங்கள் மீள் குடியேற்றப் பணிகள் நடைபெறவுள்ளதுடன் அம்மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’