-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம்.கே.சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கே.சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 24 அக்டோபர், 2011
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது: எம்.கே.சிவாஜிலிங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவத்தினர் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றி உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
வெள்ளி, 21 ஜனவரி, 2011
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
ஒன்றுபட்ட தேர்தல் கூட்டணி முயற்சியில் தமிழ்க் கட்சிகள்
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
தமிழ் கட்சிகளின் அரங்கம் ஒரு முன்னணியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முயற்சி
தமிழ் கட்சிகளின் அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு முன்னணியாக பொது சின்னத்தின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம்
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதால்; தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.
புதன், 8 டிசம்பர், 2010
விக்கிலீக்ஸினூடாக உண்மை வெளியானது குறித்து மகிழ்ச்சி - எம்.கே.சிவாஜிலிங்கம்
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் வெளியில் தெரியவந்ததையிட்டு மனத்திருப்பியடைவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
செவ்வாய், 7 டிசம்பர், 2010
விக்ரமபாகு கருணாரத்ன மீது விமான நிலையத்தில் தாக்குதல்
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இன்று பிற்பகல் விமான நிலையத்தில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய், 30 நவம்பர், 2010
த.தே. கூட்டமைப்பு சரணாகதி அரசியல் நடத்தக்கூடாது: சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
திங்கள், 29 நவம்பர், 2010
கிருஷ்ணா விரும்பியிருந்தால் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கலாம் : எம்.கே.சிவாஜிலிங்கம்
இந்திய அரசாங்கம்-கிருஷ்ணா விரும்பியிருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கலாம் என த.தே.வி.கூ.செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
வெள்ளி, 26 நவம்பர், 2010
ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியளிக்கவில்லை: சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமானது என்று கூற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வெள்ளி, 12 நவம்பர், 2010
சிங்கள மீள்குடியேற்றமானது தமிழ் மக்களை சிறுபான்மையினம் ஆக்குவதற்கு முயற்சி : எம்.கே.சிவாஜிலிங்கம்
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்களின் அடாவடி மீள்குடியேற்றமானது தமிழ் மக்களை சிறுபான்மையினமாக்குவதற்கு முயற்சியே எனத் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டணித் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
செவ்வாய், 9 நவம்பர், 2010
ரவிராஜ் கொலை; அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை : சிவாஜிலிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை மட்டுமல்ல இதுவரை இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்குமே அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை. அதை நாம் எதிர்பார்க்கவுமிலை எனத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
செவ்வாய், 2 நவம்பர், 2010
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
த.தே.கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுக்க தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வியாழன், 1 ஜூலை, 2010
தமிழ் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நாளாந்த பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையொன்று நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.
வியாழன், 13 மே, 2010
மே 18ஆம் திகதி வவுனியா நகரில் மாபெரும் ஆர்ப்பாடப் பேரணி
தமிழ் தேசிய விடுதலை முன்னணி் மற்றும் இடது சாரி முன்னணி ஆகியன இணைந்து எதிர்வரும் 18ஆம் திகதி வவுனியா நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன் எமது இணைதளத்திற்கு தெரிவித்தார்.
ஞாயிறு, 14 மார்ச், 2010
பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு கூட்டிச்சென்றது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறேன் -எம்.கே.சிவாஜிலிங்கம் _
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான வேலுப்பிள்ளை பார்வதிப் பிள்ளையை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் தாம் பல்வேறு தரப்பிலிருந்தும் விசாரிக்கப்படுவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:.
திங்கள், 22 பிப்ரவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியொன்று உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுப் பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பருத்தித்துறை இளைஞர் அணியினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு எனக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் நான் ஒரு கருத்தை முன்வைத்தேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கட்சி ஒன்று உருவாக்குவோமானால் அக் கட்சியிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் கிராமிய மட்டத்திலிருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வேட்பாளராகப் போட்டியிட்டால் நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இளைஞர்களிடம் தெரிவித்தேன்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்பட்டால் நாளை எனது முடிபை அறிவிப்பேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பருத்தித்துறை இளைஞர் அணியினரின் கலந்துரையாடல் நேற்று மாலை பருத்தித்துறை சிவன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செவ்வாய், 19 ஜனவரி, 2010
ஜனாதிபதி சுயேற்சை வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்..

வடகிழக்கு பிரதேசமெங்கும் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனால் அமுல்படுத்தப் பட்டிருந்த 14ஆவது ‘திருத்த முடியாத” ஆட்சி அதிகார சட்டத்தை மீண்டும் நிலைநாட்டுவேன் -எம்.கே.சிவாஜிலிங்கம். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் பிரதம வேட்பாளர் திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களால் ‘பிரபாகரனின் சிந்தனை” என்ற தலைப்பில் 14 அம்சதிட்டத்தை உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று, திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டிதுறையில் உள்ள வைரவர் கோயிலில் வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் விலக்கி வைக்கப்டுள்ளவரான ரெலோ உறுப்பினர் ஸ்ரீகாந்தா, இடதுசாரி முன்னனி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆயோருடன், சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
‘பிரபாகரனின் சிந்தனை” என்ற பேரில் 14 அம்சத்திட்டதை உள்ளடக்கியதாக இத்தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டு திரு. எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த 30வருடங்களுக்கு மேலாக நமது தேசிய தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்த நமது மக்கள் இன்று பல்வேறு வகையான சுதந்திரங்களை அனுபவிக்க வெளிக்கிட்டுள்ளார்கள். முக்கியமாக வன்னிமக்கள் இப்படியான சுதந்திரங்களை பெற்று வாழ்வது எதிர்காலத்தில் நமது இலச்சியமான தமிழீழத்தை அமைக்க முடியாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தும்.
வன்னி மக்கள் கடந்த 20வருடங்களுக்கு மேலாக தேசிய தலைவரை பாதுகாத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். தலைவர் அவர்களை விட்டுப் பிரிந்து இப்பொழுது தலைமறைவாக உள்ளதால் தலைவரை பாதுகாத்து வைத்திருந்த மக்கள் அவர் பிரிவால் கதிகலங்கி போய் உள்ளார்கள். இப்பொழுது அவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தெருத்தெருவாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் வருவார் அவர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தலைவர் கூறியதால் தான் நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். மகிந்தவும், சரத்பொன்சேகாவும் கூட்டுச்சேர்ந்து நமது தமிழ் இனத்தைக் கொன்று குவித்தவர்கள். மானமுள்ள எந்த தமிழனும் மகிந்த ராஜபக்சவையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டான்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் என்னை இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுவேட்பாளராக நியமித்து போட்டியிட வைப்பார்கள் என நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் அவர்கள் வேறு வழியில் செல்கிறார்கள். அவர்கள் நமது தேசிய தலைவரை மறந்து செயல்படுகிறார்கள் என நினைக்கின்றேன். அவரின் வழிகாட்டலிலேயே நாம் நான்கு கட்சியினர் ஒன்றுசேர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி கொண்டோம். இப்பொழுது இருப்பது தமிழ்தேசியக் கூட்டமைப்பல்ல. அது எப்பொழுதோ பிரிந்து விட்டது. இப்பொழுது இருப்பது இரா.சம்பந்தன் சேனாதிராஜா கூட்டமைப்பேயாகும்.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக வன்னியில் பிரபாகரன் காலத்தில் நடைமுறைபடுத்தப் பட்டிருந்த
1. 14ஆவது ‘திருத்தமுடியாத” சட்டத்துக்கு அமைந்த ஆட்சி அதிகாரத்தை தமிழீழ பிரதேசமெங்கும் நிலைநாட்டுவதோடு, எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபட்ட 14 அம்சதிட்டங்களையும் மூன்று மாதத்துக்குள் நடைமுறைப் படுத்துவேன்.
14ஆவது ‘திருத்த முடியாத” சட்டத்தின் உற்பிரிவுகள்..
ய. தமிழீழ பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளான (பேச்சுரிமை, தேர்தல் நடத்தும் உரிமை, கூட்டம் கூடுதல், அரசியல் கட்சியமைத்தல், இந்திய சினிமா பார்த்தல்.. ) யாவும் வழங்கப்பட மாட்டாது
டி. எட்டாம் வகுப்புக்கு மேல் யாரும் பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உ. 35வயதுக்கு மேற்பட்டவர்களே கல்யாணம் முடிப்பதற்கு உரித்துடையவர்கள்.
ன. ‘வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு சேவை” எனும் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்காக அழைக்கப்படுவார்கள்.
ந. தமிழீழ பிரதேசத்திலிருந்து யாரும் தமிழீழ காவல்துறையின் அனுமதியில்லாமல் வெளிப்பிரதேசங்களுக்கு பயணிப்பது மரணதன்டனைக்குரிய குற்றமாகும்.
க. தமிழீழ பிரதேசத்திற்குள் இருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் யாவும் தலைவருக்கே உரித்துடையவையாகும்.
2. வடகிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து இரானுவ முகாம்களும் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கிருந்து கொண்டு தமிழர்களை துன்புறுத்தி கொண்டிருக்கும் இராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்புவேன்
3. இராணுவத்தால் கட்டாயப்படுத்தி பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எதிர்கால மாவீரர்கள் 13,000பேரையும் விடுதலை செய்யபட்டு அவர்களுக்கு மீண்டும் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும்.
4. திருவேங்கடம் வேலுப்பிள்ளையாரின் 31ஆவது நினைவுதின விழாவை மாபெரும் விழாவாக நடத்துவேன். இந்த விழாவுக்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள தேசிய தலைவரின் உற்றார், உறவினாகள்;, நன்பர்கள், தேசபக்தர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.
5. வல்வெட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், அந்த துறைமுகத்தை கொழும்பு துறைமுகத்துக்கு ஈடான ஒரு துறைமுகமாய் மாற்றியமைப்பதோடு, புலிகளிடமிருந்த 14கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து வல்வெட்டி துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு வழிவகுப்பேன். வல்வெட்டிதுறை மக்களின் மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கு என்னாலான சகல உதவிகளையும் செய்யவுள்ளேன்.
6. மக்கள் பாவனைக்காக தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ள ஏ9பாதை மீண்டும் மூடி யாழ்பாண மக்களுக்கான சகல உணவு வினியோக வழிகளையும் தடை பண்ணுவேன்.
7. நமது தேசிய தலைவர் வன்னியில் எங்கெங்கு குடியிருந்தாரோ, அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அங்கே பாதாள மாளிகைகள் கட்டி அதை மக்கள் பார்வைக்கு முன் வைப்பேன்.
8. வடகிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்களை கைது செய்து, அவர்களிடமிருந்து அனைத்து ஆயுதங்களையும் களைந்து, அவர்களை சிறையில் அடைப்பேன்.
9. இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்தை உடனடியாக மூடி, இந்திய தூதரை நமது நாட்டிலிருந்து வெளியேற்றுவேன். எனிவருங்காலங்களில் இந்தியர்களுக்கு விசா வழங்கும் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும்.
10. நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு தேசிய தலைவரால் செப்பப்பட்ட எதிரி, துரோகி, காட்டிக்கொடுப்பவன், ஒட்டுக்குழு, போன்ற தமிழ்சொற்களை ஈழத்தமிழ் இலக்கணச் சொற்களாக ஏற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வேன்.
11. கப்பம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற தொழில்களுக்கு மானியம் வழங்கி அத்தொழில்களை மக்கள் செய்வதற்கு பயிற்சியளித்து ஊக்குவிப்பேன்.
12. தமிழீழத்தில் கன்னிவெடி, மின்னிவெடி, கிளைமோர், கிரனைற் குண்டு தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகளை மீண்டும் உருவாக்குவேன்.
13. புலிஈழம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதோடு, படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் அமைப்பேன்.
14.மகிந்த ராஜபக்சவால் புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினருக்கான நினைவு சின்னத்தை உடனடியாக அகற்றி அதற்கு பதிலாக கடைசிக்கட்ட போரில் இறந்த நமது மாவீரர்களுக்கு அதே இடத்தில் நினைவுசின்னம் ஒன்றை எழுப்புவேன்.
இந்த எனது கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்மக்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் தமிழ்தேசியம், தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை, தமிழர்தாயக பிரதேசம் போன்ற நமது இலச்சிய கோட்பாட்டை சர்வதேசத்தினருக்கு பறைசாற்ற முடியும். சிங்களதேசத்தினர் நமக்கு எந்தவுரிமையைiயும் கடந்த 60ஆண்டுகளாக தரவுமில்லை, இனிவரும் காலங்களில் தரப்போவதுமில்லை. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அதனால்தான் நான் சுயேற்சை வேற்பாளராக ஐனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தேன். நான் எடுத்த இந்த நிலைப்பாட்டை தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதோடு அவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி… எம்.கே.சிவாஜிலிங்கம்.
(ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள போதிலும் நமது சிவாஜிலிங்கத்தார் எதனையும் இதுவரை வெளியிடாமல் இருப்பது நமக்கு மிகுந்த மனக்கவலையைத் தந்தது… பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையாரின் மரணச்சடங்கு, பிரபாகரனின் மாமியாரான சின்னம்மா ஏரம்பு அவர்களை மாலைதீவுக்கு கொண்டு சென்று உறவுகளிடம் ஒப்படைத்தது, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவை வெளிநாட்டில் அவரது மற்றையப் பிள்ளைகளிடம் அனுப்பும் அலுவல் என வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் இருப்பதால் (பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த புலியுறுப்பினர்களையும் இலங்கையில் அழித்தது போன்று தற்போது பிரபாகரனின் உறவினர்களையும் இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தும் கைங்கரியத்திலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளதால்) அவரது வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் அவர் சார்பில் எம்மால் தயாரிக்கப்பட்டது இது -கரிகாலன்!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















