இந்திய அரசாங்கம்-கிருஷ்ணா விரும்பியிருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கலாம் என த.தே.வி.கூ.செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வந்த எஸ்.எம். கிருஷ்ணா தமிழ்க் கட்சிகள் அரங்கத்துடன் சந்தித்து கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் காலநிலை சீர்கேடு காரணமாக சந்திக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்தது. இது தொடர்பாக சிவாஜிலிங்கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"பொறுப்பற்ற விதத்தில் காலநிலையை காரணம் கூறுகிறது அரசாங்கம். விமான நிலையத்தில் வைத்துக்கூட தமிழ்ப் பிரதிநிதிகளை கிருஷ்ணா சந்தித்திருக்கலாம் எனவும் அவர் விசனம் தெரிவித்தார். இதன்மூலம் தமிழ் மக்கள் மீது இந்திய அரசாங்கம், எத்தகைய அக்கறை வைத்திருக்கிறது எனபது புலனாகின்றது" எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’