வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 அக்டோபர், 2011

அமெரிக்கா செல்லும் தூதுக்குழுவில் ரெலோ உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படாததால் அதிருப்தி


மெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தூதுக்குழுவில் கூட்டமைப்பின் பங்குதாரரான ரெலோவின் பிரதிநிதிகள் சேர்க்கப்படாததையிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் வாக்குவாதங்கள் இடம்பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாளை அதிகாலையில் அமெரிக்கா செல்லவுள்ள குழுவில் சமஷ்டிக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றின் பிரதிநிதிகளே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். செல்வம் அடைக்கலநாதன், விநோநோகராதலிங்கம் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்கு இடம் தரத் தவறியமை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் முறையிடவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் ஆர்.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெறுவர். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் ஆவர். ஏனைய மூவரும் சமஷ்டிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஹிலரி கிளின்டன் தவிர வேறு யாரை இந்த தூதுக்குழுவினர் சந்திக்கவுள்ளனராவெனக் கேட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தொடர்புடைய சகலரையும் சந்திக்க முயல்வோம். ஆனால் சகலரும் நேரம் தருவரெனக் கூறமுடியாதெனவும் கூறினார். வடக்கு, கிழக்கில் காணிப்பதிவு, குடியேற்றம், இராணுவத்தைக் குவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கவலைகள் பற்றி யாவரும் அறிவர். இவை பற்றியே நாம் பேசுவோமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அமெரிக்காவிலுள்ள தமிழர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும். திரும்பிவரும்போது லண்டனிலுள்ள புலம்பெயர்ந்தோரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமெனவும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் துடிப்புமிக்க உறுப்பினரான விசுவநாதனை சந்திக்கும் திட்டமில்லையென ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது மாவை சேனாதிராஜா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’