வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வடக்கு கிழக்கிற்கான காணிச்சுற்று நிருபம் தொடர்பாக சுமந்திரன் எம்.பி. மனு


தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்யும் காணிச் சுற்றுநிருபம் தொடர்பாக ஒரு ஆணைக்கோரும் விண்ணப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.
காணிச் சுற்றுநிருபம் இல 2011ஃ04 ஐ காணி ஆணையாளர் மற்றும் தொடர்புடைய வேறு அதிகாரிகள் செயற்படுத்துவதை தடுக்கும் படியான இடைக்கால தடையுத்தரவை கோரும் விண்ணப்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய சுற்றுநிருபம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்காக காணிகளை விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்துள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள சகலரும் தமது சகல காணிகளையும் வெளிப்படுத்தும் படிவம் ஒன்றை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களிடம் இரு மாதங்களுக்குள் நிரப்பிக் கொடுக்க வேண்டுமென இந்த சுற்று நிருபம் கோருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’