வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 அக்டோபர், 2011

புலம்பெயர் தமிழர்களுடன் போராட வேண்டியுள்ளது


க்களால் தெரிவு செய்யபட்டு அந்த மக்களுடனேயே வாழந்து வரும் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா போதைப் பொருள் வியாபாரியோ அல்லது பாதாள உலகத்துடன் தொடர்புபட்டவரோ அல்லர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் எப்போதும் மக்களுடனேயே காணப்படும் ஒருவர் எனவும் அவர் கூறியுள்ளார். அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், துமிந்த சில்வாவுக்கு எதிராக பலர் பல குற்றச்சாட்டுகளை சுமத்திகின்ற போதிலும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறாறெல்லாம் நான் கூறுவதன் மூலம் நான் எவரையும் பாதுகாக்க முயற்சிக்கவும் இல்லை. எவருக்கும் பயந்து செயற்படவும் மாட்டேன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதியுடன் ஏன் நான் கடமையாற்ற முடியாது.? துமிந்த சில்வாவை விடவும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை நீண்ட காலமாகத் தெரியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. (கிருபா)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’