தமிழ் தேசிய விடுதலை முன்னணி் மற்றும் இடது சாரி முன்னணி ஆகியன இணைந்து எதிர்வரும் 18ஆம் திகதி வவுனியா நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன் எமது இணைதளத்திற்கு தெரிவித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்ததின் போது முள்ளிவாய்க்கல் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூறுமுகமாகவும் 12,000 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் யுத்ததின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும்படி வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இறுதிக் கட்ட யுத்ததின் போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்தல், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் உயிருடன் இருப்பின் அவர்களை விடுதலை செய்தல், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தல் போன்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் கலந்து கொள்வார் என்றும் எமது இணைதளத்திற்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’