வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

ரூ.1,1/2 கோடியான போதைப்பொருளை கொழும்புக்கு கடத்த முயற்சித்தவர் கைது

சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானத்தின் மூலம் சுமார் 1,1/2 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களைக் கடத்த முயற்சித்த திருச்சி பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து கொழும்புக்கு இந்திய நேரப்படி நேற்று இரவு 11.45 மணிக்கு விமானம் புறப்பட தயாரானபோது குறித்த விமானத்தில் கேட்டமின் என்ற போதை பொருள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் விமானத்துக்குள் உட்புகுந்த சுங்க அதிகாரிகள், அதிலிருந்த பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளனர். அதன்போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்த திருச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற பயணியொருவரைச் சந்தேகித்த அதிகாரிகள் அவரது விமான பயணத்தை ரத்து செய்து உடமைகளைச் சோதனையிட்டனர்.
இதன்போது, அவரது பயணப் பொதியிலிருந்து 14 கிலோகிராம் நிறையுடய கேட்டமின் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விமானப் பயணி கைது செய்யப்பட்டார்.
அவர் இந்த போதைப் பொருட்களை எங்கிருந்து யாருக்கு கடத்தி செல்கிறார்? கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’