வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 ஜூலை, 2010

தமிழ் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நாளாந்த பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையொன்று நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர்  இணையதளத்திற்கு தெரிவித்தார்.



இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்புக்கான பிரதான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள முடியாமையே என அவர் குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தை நாளை காலை 8.30 மணிக்கு ஈ.பீ.டீ.பீ கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெறவிருப்பதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தையொன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப்(பத்மநாபா), ஈ.பீ.டீ.பீ, ஈரோஸ் மற்றும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’