வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 நவம்பர், 2010

சிங்கள மீள்குடியேற்றமானது தமிழ் மக்களை சிறுபான்மையினம் ஆக்குவதற்கு முயற்சி : எம்.கே.சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்களின் அடாவடி மீள்குடியேற்றமானது தமிழ் மக்களை சிறுபான்மையினமாக்குவதற்கு முயற்சியே எனத் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டணித் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தேசியவீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான இடத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். இக்குடியேற்றமானது இஸ்ரேல் நாட்டில் யூதர்களைக் குடியேற்றியதற்கு ஒப்பானதாகும்.
இச்செயலுக்கு எதிராக தேசிய வீடமைப்பு அதிகார சபை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இல்லை. எனவே இம்மீள்குடியேற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ் அரசாங்க அதிபரிடமும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
அண்மையில் கிண்ணியா கண்டக்காடு பிரதேசத்தில் தமக்குச் சொந்தமான இடங்களில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டபோதும் அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நடவடிக்கைகள் மூலம் எமது தமிழ்ச்சமூகம் தெடர்ந்தும் பாதிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’