தமிழ் கட்சிகளின் அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு முன்னணியாக பொது சின்னத்தின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
.இது தொடர்பில் புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி) தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சி கட்சிகள் தமிழ் தேசிய விடுதலை முன்னணியிடம் (த.தே.வி.மு) இணக்கம் தெரிவித்துள்ளதாக த.தே.வி.முயின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம் கூறினார்.
அரசியல் தீர்வு தொடர்பில் பொது நிலைப்பாட்டை அடைவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். எமது ஒருமித்த நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காக தேர்தலில் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டும். நாங்கள் பிரிந்து நின்றால் மக்களுக்கு எம்மீதுள்ள நம்பிக்கை இழக்கப்படும் என அவர் கூறினார்.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை கலைக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது. விதிகளின் படி மார்ச் மாதமளவில் தேர்தல் இடம்பெறும்.
வேட்பு மனு தாக்குதலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’