முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான 16 பேர் கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பவை உள்ளடங்கிய 8 அம்சங்களை கொண்ட மகஜரொன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்ணனியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’