வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியொன்று உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுப் பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பருத்தித்துறை இளைஞர் அணியினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு எனக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் நான் ஒரு கருத்தை முன்வைத்தேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கட்சி ஒன்று உருவாக்குவோமானால் அக் கட்சியிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் கிராமிய மட்டத்திலிருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வேட்பாளராகப் போட்டியிட்டால் நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இளைஞர்களிடம் தெரிவித்தேன்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்பட்டால் நாளை எனது முடிபை அறிவிப்பேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறை இளைஞர் அணியினரின் கலந்துரையாடல் நேற்று மாலை பருத்தித்துறை சிவன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’