வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 நவம்பர், 2010

த.தே. கூட்டமைப்பு சரணாகதி அரசியல் நடத்தக்கூடாது: சிவாஜிலிங்கம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

"வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காக இதில் கலந்துகொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு போன்றவற்றில் எந்த தீர்வையும், திட்டவட்டமான நிலைப்பாட்டையும் இந்த வரவுசெலவுத்திட்டம் வழங்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பேச்சுவார்தையை ஆரம்பிக்காமலும் வடக்கு கிழக்கு மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பை பெறாமலும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தமிழ் மக்களை அரசாங்கம் அவமதித்து வருகிறது.
இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.
1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், 3 ஆண்டுகள் மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்ற ஜே.ஆர். ஜெயவர்தனவின் வாக்குறுதியை நம்பி தமிழர் விடுதலைக் கூட்டணி அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், 31 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமலுள்ளது.
அதனால் பல்லாயிரக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பதையும் நாடு அறியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவும் மேற்கு நாடுகளும் அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இடையூறாக நடந்துகொள்ளக்கூடாது' எனக் கேட்டுக் கொள்கிறோம்." கூறுகையில் என்றார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே வழக்கு கிழக்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்தார்கள். அக்கட்சிக்கு 14 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. அதனால் தமிழ் மக்கள் சார்பாக அவர்களுடன் அரசாங்கம் பேச வேண்டியுள்ளது எனவும் சிவாஜிலிங்கம் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’