வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம்

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதால்; தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

மேலும் இன்றுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவும் எதுவித தீர்வையும் தராத நிலையில் வெறும் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது அதிகாரமற்ற ஓர் ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகின்றது.
அதுபோலவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களையாவது இவர்களால் இதுவரை வெளியிட முடியவில்லை.
எனவேதான் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கோ இன்றுவரை எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. இனியும் எந்தத்தீர்வும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’