வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இரண்டு இறங்குதுறைகள் அமைச்சரால் இன்று திறந்து வைப்பு!

ப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையை ஜப்பானிய ஜய்க்கா நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இதற்காக ஜனாதிபதி சார்பாகவும் எமது மக்கள் சார்பாகவும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை யாழ் காக்கைத்தீவு மற்றும் நாவாந்துறை பகுதிகளில் இரு இறங்குதுறைகளை சம்பிரதாயப் பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இயற்கை மற்றும் யுத்த அழிவுகளால் சேதமாகிய இவ் இறங்குதுறைகள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு விடப்படுவதை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இவற்றை சரியாகப் பராமரித்து பயன்படுத்துவதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஜய்க்கா நிறுவனம் பல்வேறு வழிகளில் எமது மக்களுக்கு உதவி வருவதை உணர்த்திய அமைச்சர் அவர்கள் வேலணை பகுதியில் கடல் தாவர செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் குருநகர் மற்றும் மண்டைதீவு பகுதிகளில் கடல் அட்டை வளர்ப்பினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் மேற்படி நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் இதன் மூலம் எமது மக்கள் உயரிய பயனை அடைய முடியுமென்றும் தெரிவித்தார்.
ஜய்க்கா நிறுவனம் கடல்தொழில் சார்ந்த கல்லூரி ஒன்றையும் மீளக் கட்டியெழுப்ப உள்ளதையும் சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதன் மூலம் கடல்தொழில் சார்ந்த புதிய தொழில் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்று இத்தொழிலை முன்னேற்ற முடியும் என்பதையும் உணர்த்தினார்.
இதேநேரம் கடல் தொழிலாளர் சங்கங்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்வுகள் எடுக்கப்படுமென்பதையும் அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் ஜய்க்கா நிறுவனப் பிரதிநிதிகள் உதவி அரச அதிபர்கள் யாழ் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’