தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவத்தினர் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றி உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று திங்கள் இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர். பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து வீடு உடைக்கப்பட்டது. தற்போது வீட்டின் இடிபாடுகள் அத்திபாரத்துடன் கிண்டிக் கிளறி அகற்றப்பட்டுள்ளன. அந்த இடத்தில் ஒரு வீடு இருந்த இடமே தெரியாது செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வடபகுதிக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’